By September 24, 20170 CommentsReport

மெர்சல் சர்ச்சை: சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை..!!

திரையுலகில் கதை திருட்டு, தலைப்பு திருட்டு என்று அவ்வப்போது பிரச்னைகள் வந்துபோவது வழக்கமான ஒரு நிகழ்வாக இருந்தாலும் தற்போது ‘மெர்சல்’ தலைப்புக்கான மோதல் தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், டிரேட்மார்க் என்ற புதிய பிரச்னை எழுந்துள்ளது. அட்லி இயக்கத்தில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மெர்சல். இந்தப் படத்தின் டீசர் 22ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில், மெர்சல் என்ற தலைப்பில் படத்தை விளம்பரம் செய்வதற்கு அக்டோபர் 3ஆம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

2014ஆம் ஆண்டு கிரீன் ஆப்பிள் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகமது சாதிக் என்பவர் ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளனர். இந்தத் தலைப்பின் உரிமையை ஏ.ஆர்.பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ராஜேந்தர் என்பவர் வாங்கியுள்ளார். அறிமுக இயக்குநர் வெற்றிசெல்வன் இயக்கத்தில் தனது மகன் ‘ஆருத்’தைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் படத்துக்கு உபயோகிக்கவே இந்தத் தலைப்பின் உரிமையைப் பெற்றுள்ளார் ஏ.ராஜேந்தர்.

இந்த நிலையில் ஜூன் 21ஆம் தேதி விஜய் பிறந்தநாள் அன்று விஜய், அட்லி கூட்டணியில் உருவாகும் படத்துக்கு ‘மெர்சல்’ என்று பெயர் வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டது. இதனையடுத்து தலைப்பு வெளியான அதேநாள் மெர்சல் தலைப்பை உபயோகிப்பதற்குத் தடை விதிக்கக் கோரி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏஆர் ஃபிலிம் ஃபாக்டரி நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மெர்சல் படத்தை விளம்பரம் செய்ததோடு பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா, ட்விட்டரில் இமோஜி, தலைப்புக்கான வர்த்தக முத்திரை (டிரேட்மார்க்), டீசர் வெளியீடு என்று தொடர்ந்து படத்தை புரமோஷன் செய்வதற்கான அனைத்துப் பணிகளையும் படக்குழுவினர் மேற்கொண்டு வருவதோடு தீபாவளி அன்று படம் வெளியாகும் எனவும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் தெரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஏஆர் பிலிம் ஃபாக்டரி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மெர்சல் என்ற தலைப்பில் விஜய் நடித்துள்ள படம் தீபாவளி அன்று வெளிவரவுள்ளது. இந்த மெர்சல் தலைப்பும் நான் பதிவு செய்துள்ள மெர்சலாயிட்டேன் என்ற தலைப்பும் ஒத்து இருக்கிறது. மெர்சலாயிட்டேன் என்ற தலைப்பைப் பயன்படுத்தி அதிக பொருட்செலவில் படம் எடுத்துவரும் நிலையில் மெர்சல் என்ற தலைப்பில் விஜய் படம் வெளியானால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். இது தொடர்பாக ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனமோ அல்லது அதன் உரிமையாளர் என்.ராமசாமியோ, மெர்சல் என்ற பெயரை பயன்படுத்தவோ அல்லது இந்த பெயரை பயன்படுத்திப் படத்தை வெளியிடவோ தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அக்டோபர் 3ஆம் தேதி வரை இரண்டு வார காலத்துக்கு மெர்சல் என்ற தலைப்பில் படத்தை விளம்பரப் படுத்தவும், படம் சம்பந்தப்பட்ட தகவல்கள் வெளியிடவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, அதிக பொருட்செலவில் படம் உருவாக்கப்பட்டுள்ளதால் படத்தை விளம்படுத்த தடை விதிக்கக் கூடாது என்று படக்குழு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தலைப்புக்கான உரிமை 27.01.2018 வரையில் எங்களுக்கு உள்ளது. விக்ரம் நடிப்பில் வெளியான இருமுகன் படத்துக்கு மெர்சலாயிட்டேன் தலைப்பின் உரிமையை அவர்கள் கேட்ட போது நாங்கள் கொடுக்க மறுத்துவிட்டோம். ஆனால், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் எங்களிடம் எந்த விதமான அனுமதியும் பெறாமல் மெர்சல் தலைப்பை பயன்படுத்தி எங்களுக்கு நஷ்டத்தை உண்டாக்கியுள்ளனர். நாங்கள் மெர்சல் பட தயாரிப்பாளர்களிடம் பணம் பறிக்க முயல்வதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. இதை நாங்கள் முற்றிலும் மறுக்கிறோம். எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் என்பதற்கோ, பணம் என்பதற்கோ இடமில்லை. எங்களுடைய தலைப்பை நாங்கள் எப்போதும் விட்டுத்தர மாட்டோம். மேலும், மெர்சல் தலைப்புக்கு வழங்கப்பட்டுள்ள வர்த்தக முத்திரையை (டிரேட்மார்க்) நீக்கக் கோரியும் புகார் அளித்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு முறையும் விஜய் படம் வெளியாகும் போது ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்வது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்ட நிலையில் இந்தப் பிரச்னையில் இருந்து எப்படி மீளப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இப்பிரச்னை தொடர்பாக ஏஆர் பிலிம் பாஃக்டரி நிறுவனத்தின் மேலாளர் கார்த்திகேயனை தொடர்புகொண்டு மின்னம்பலம் சார்பில் கேட்டபோது இந்தத் தலைப்பை எந்த காரணத்துக்காகவும் விட்டுத்தர முடியாது. எங்களுடைய மெர்சலாயிட்டேன் படம் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரையில் 40 சதவிகிதம் வரையில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. சில பொருளாதார ரீதியிலான காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மீண்டும் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும். மேலும் இன்னும் ஓரிரு நாள்களில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நாங்கள் அளித்த புகாருக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம் என்று கூறினார்.

இந்தத் தலைப்புக்கான உரிமை 27.01.2018 வரையில் எங்களுக்கு உள்ளது. விக்ரம் நடிப்பில் வெளியான இருமுகன் படத்துக்கு மெர்சலாயிட்டேன் தலைப்பின் உரிமையை அவர்கள் கேட்ட போது நாங்கள் கொடுக்க மறுத்துவிட்டோம். ஆனால், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் எங்களிடம் எந்த விதமான அனுமதியும் பெறாமல் மெர்சல் தலைப்பை பயன்படுத்தி எங்களுக்கு நஷ்டத்தை உண்டாக்கியுள்ளனர். நாங்கள் மெர்சல் பட தயாரிப்பாளர்களிடம் பணம் பறிக்க முயல்வதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. இதை நாங்கள் முற்றிலும் மறுக்கிறோம். எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் என்பதற்கோ, பணம் என்பதற்கோ இடமில்லை. எங்களுடைய தலைப்பை நாங்கள் எப்போதும் விட்டுத்தர மாட்டோம். மேலும், மெர்சல் தலைப்புக்கு வழங்கப்பட்டுள்ள வர்த்தக முத்திரையை (டிரேட்மார்க்) நீக்கக் கோரியும் புகார் அளித்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு முறையும் விஜய் படம் வெளியாகும் போது ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்வது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்ட நிலையில் இந்தப் பிரச்னையில் இருந்து எப்படி மீளப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Post a Comment

CAPTCHA
Refresh

*