By September 24, 20170 CommentsReport

துல்கருக்கு ஜோடியான புருஸ்லீ நாயகி..!!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘புருஸ்லீ’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை க்ரீத்தி கர்பந்தா. தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துவரும் அவர், பாலிவுட்டில் முதன்முறையாக துல்கர் சல்மான் அறிமுகமாகும் ‘கர்வான்’ என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார்.

தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஆகர்ஷ் குரானா என்பவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இர்பான் கான் நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாநாயகியாக மிதிலா பார்க்கர் நடிக்கிறார். இந்தப் படத்தில் துல்கருக்கு ஜோடியில்லை என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது துல்கருக்கு ஜோடியாக க்ரீத்தி கர்பந்தா நடிப்பதாக பாலிவுட் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வெவ்வேறு வாழ்க்கைப் பின்னணி கொண்ட இரண்டு நண்பர்களைப் பற்றிய கதையாக உருவாகி வருகிறது. இந்தியில் உருவாகினாலும் இதன் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் கொச்சின் ஆகிய இடங்களில் நடைபெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கும் நேரடி தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் துல்கர் சல்மான்.

பாலிவுட்டில் `ராஸ்: ரீபுட்’, `ஹெஸ்ட் இன் லண்டன்’ உள்ளிட்ட படங்களில் க்ரீத்தி கர்பந்தா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*