By September 25, 20170 CommentsReport

தீபாவளி, பொங்கல் ரேசில் களமிறங்கும் விஷால் படங்கள்..!!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் காரணமாக விஷால் நடிப்பில் உருவாகி வந்த படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய `துப்பறிவாளன்’ வெளியாகி தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளத்திலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில், `துப்பறிவாளன்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கான `டிடெக்டிவ்’ (Detective) வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது.

அதேநாளில் மோகன்லால் – விஷால் – ஹன்சிகா நடிப்பில் மலையாளத்தில் உருவாகி இருக்கும் `வில்லன்’ படமும் திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் உருவாகிவரும் த்ரில்லர் படமான `இரும்புதிரை’ தைப்பொங்கல் விருந்தாக வருகிற ஜனவரி 12-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வின்சென்ட் அசோகன், கோபி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*