By September 26, 20170 CommentsReport

நான் அதிர்ஷ்டசாலி: நெகிழ்ந்துபோன ஓவியா..!!

பிக் பாஸ் மூலம் தமிழ் மக்கள் மனதில் அழுத்தமான இடம் பிடித்துள்ளார் ஓவியா. அந்த நிகழ்ச்சிக்குப் பெரும் விளம்பரத்தை ஓவியா பெற்றுத் தந்துள்ளார் என்று பல இயக்குநர்களும் அவரைத் தங்கள் படங்களில் நடிக்கவைக்க முயற்சித்து வருகின்றனர். அதேவேளையில் பல நிறுவனங்கள் அவரைத் தங்கள் நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் நடிக்கவைக்கும் முயற்சிகளிலும் இறங்கியுள்ளன.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் தனது புதிய கிளையைச் சென்னை பழைய மகாபலிபுர சாலையில் தொடங்கியுள்ளது. ‘தி கிரெளன் மால்’ என்ற ஆறு மாடி விற்பனையகத்தை இதற்காகக் கட்டியுள்ளது. இந்தக் கடைக்கான விளம்பரத் தூதராக ஓவியா ஒப்பந்தமாகியுள்ளார். இந்தக் கடை திறப்பு விழா இன்று (செப். 25) நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஓவியாவைக் காண அவரது ரசிகர்கள் காலையிலேயே குவிந்தனர். தனது ரசிகர்களைப் பார்த்து மலைத்துப்போய் நின்ற ஓவியா, “லவ் யூ கைஸ்” என்று கத்தினார். தொடர்ந்து பேசிய அவர், ”எனக்குப் பேசலாம் வராது. நீங்கள் எதாவது கேள்வி கேளுங்க. உங்கள் யார் முகத்திலும் ஸ்ப்ரே அடிக்க மாட்டேன். பயப்படாமல் கேளுங்க” என்றார். அப்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘கொக்கு நெட்ட கொக்கு’ பாடலைப் பாடியபடி மெதுவாக நடனமாடினார்.

“பிக்பாஸ் வீட்டில் உங்களுக்குப் பிடித்த போட்டியாளர் யார்?’ என்ற கேள்விக்கு பதிலளித்த ஓவியா, “நடிகை அனுயாதான் என் ஃபேவரைட். அவர் என் நெருங்கிய தோழி’’ என்றார். மேலும், ”நூறு நாள்களுக்கு பிக் பாஸ் பற்றி பேசக் கூடாது என்பது ரூல்ஸ். அந்த ரூல்ஸை பிரேக் பண்ணக் கூடாது. நூறாவது நாள் அன்று நான் அங்கே ஸ்டேஜ்ல இருப்பேன், அங்கே பார்ப்போம். வெயிட் பண்ணுங்கள். உங்களைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. நிபந்தனையற்ற லவ் கிடைப்பது கஷ்டம். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. ஐ லவ் யூ சோ மச் கைஸ்” என்றார்.

“ஆரவ்வை இன்னும் காதலிக்கிறீர்களா?” என்று கேட்கப்பட்டபோது ”எனக்கு இவ்வளோ லவ் வரும்போது, நான் ஏன் ஒரு ஆளை மட்டும் லவ் பண்ணணும்? இவங்க எல்லோரையும் லவ் பண்ணுறேன், ஐ லவ் யூ… பிக் பாஸ் நூறாவது நாள் அன்னைக்குப் பார்க்கலாம்” என்று கூறி ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*