By September 27, 20170 CommentsReport

கார்த்தி ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கும் `தீரன் அதிகாரம் ஒன்று’ படக்குழு..!!

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள படம் `தீரன் அதிகாரம் ஒன்று’.

`சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கியிருக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

இவர்களுடன் அபிமன்யு சிங், போஸ் வெங்கட், ஸ்கார்லெட் மெல்லிஸ் வில்சன், மேத்யூ வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இது கார்த்தி ரசிகர்களுக்கு சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 17-ம் தேதி டிரெய்லரும், இதற்கிடையே படத்தின் இசை வெளியீட்டு விழாயும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. நவம்பர் 17-ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*