By October 1, 20170 CommentsReport

சோலோ: நான்காவது நாயகி அறிமுகம்..!!

டேவிட் படத்துக்குப் பிறகு பிஜாய் நம்பியார் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் திரைப்படம் சோலோ. துல்கர் சல்மான் நான்கு விதமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இதில் ருத்ரா கேரக்டரில் நேஹா ஷர்மா, சிவா கேரக்டரில் ஸ்ருதி ஹரிஹரன், சேகர் கேரக்டரில் தன்ஷிகா ஆகியோர் துல்கருக்கு ஜோடிகளாக நடித்திருந்தது பற்றிய அறிவிப்புகள் வெளிவந்தது. தற்போது த்ரிலோக் கேரக்டரில் துல்கருக்கு ஜோடியாக ஆர்த்தி வெங்கடேஷ் நடித்திருக்கும் போஸ்டர்களை இயக்குநர் பிஜாய் நம்பியார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு நான்கு விதமாக உருவாகியுள்ள இதில், இரண்டு காதலை மையப்படுத்தியும், இரண்டு கோபத்தை மையப்படுத்தியும் அமைக்கப்பட்டுள்ளன. 3 ஒளிப்பதிவாளர்களும் 11 இசையமைப்பாளர்களும் பணிபுரியும் இந்தப் படத்தை ‘ரெஃபிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து பிஜாய் நம்பியார் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘GETAWAY ஃபிலிம்ஸ்’ மூலம் பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறார்.

தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கும் இதன் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படத்துக்கு U/A சான்றிதழ் கிடைத்ததையடுத்து அக்டோபர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*