By October 1, 20170 CommentsReport

நயன்தாரா: ரஜினி – அஜித் பெஸ்ட்..!!

தமிழ் சினிமா நடிகைகளுள் முன்னணி நாயகியாக வலம்வருபவர் நயன்தாரா. ‘மாயா’ படத்துக்குப் பிறகு தொடர்ந்து தன்னை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடித்துவரும் அவர், தற்போது நடித்து முடித்திருக்கும் படம் ‘அறம்’. இப்படத்தின் புரோமஷனுக்கான வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அந்தவகையில் நேற்று (செப்டம்பர் 30) காலை சன் டிவியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி – அஜித் ஆகிய இருவரையும் புகழ்ந்து பேசியுள்ளார்.

அறம் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில், அஜித் குறித்து உங்களின் கருத்து என்ன என்ற கேள்விக்கு, “அஜித் போன்ற ஒருவரை நான் பார்த்ததே இல்லை. ஷூட்டிங் செட்டில் அனைவரையும் அன்பாக விசாரிப்பார். அவரைப் போலவே ரஜினி சாரும் அன்பாக நடந்து கொள்வார். பெண்கள் விஷயத்தில் இருவரும் மிகவும் மரியாதையாக நடந்துகொள்வார்கள். அவர்கள் அருகே பெண்கள் வந்தால் இருவரும் எழுந்து நின்று மரியாதை கொடுத்து பேசுவார்கள். அந்த விஷயத்தில் அவர்களைத் தட்டிக்க ஆளே இல்லை. அதனால்தான் அவர்களுக்கு மிகப்பெரிய ஸ்டார் வேல்யூ இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

கோட்டப்பாடி ஜெ.ராஜேஷ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தை கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்துக்கு U சான்றிதழ் கிடைத்திருப்பதை அடுத்து விரைவில் ரிலீஸ் தேதி குறித்தான அறிவிப்புகள் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*