By October 3, 20170 CommentsReport

`திருட்டுபயலே-2′ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு..!!

கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `திருட்டுபயலே’ படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி இருக்கிறது.

சுசி கணஷேன் இயக்கியிருக்கும் `திருட்டுபயலே-2′ படத்தில் பாபி சிம்ஹா – பிரசன்னா – அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சனம் ஷெட்டி, விவேக், ரோபோ ஷங்கர், தமீம் அன்சாரி, ஆடம்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வித்யாசாகர் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்திருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் வருகிற நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாக இருப்பதாக அர்ச்சனா கல்பாத்தி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*