உதயநிதி படத்திற்கு பாதகமில்லை..!!
உதயநிதி ஸ்டாலின்- மஞ்சிமா மோகன் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் இப்படை வெல்லும். தூங்கா நகரம், சிகரம் தொடு ஆகிய வெற்றிப் படங்களை தந்த கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளின் முடிவடைந்து நிலையில், படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.உதயநிதி, மஞ்சிமா இருவருமே சாஃப்ட்வேர் இன்ஜினியர்களாக இதில் நடித்திருக்கிறார்கள். பொதுவாக எம்மனசு தங்கம் படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் சூரியோடு இணைந்து காமெடி கூட்டணி அமைத்துள்ளார் உதயநிதி. இவர்களுடன் ராதிகா, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்திற்கும் இதற்கு மதன்கார்க்கி, அருண்ராஜா காமராஜ் ஆகிய இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவாளராகவும், பிரவின் கே.எல் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன் படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்திருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதன் டீசர் வெளியாகி 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. படத்தின் வெளியீட்டு தேதி உட்பட மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.