By October 4, 20170 CommentsReport

வைரலாகும் ‘காலா’ நாயகியின் உடற்பயிற்சி வீடியோ..!!

கபாலி படத்துக்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹூமா குரேஷி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காலா’. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. தற்போது, அதன் படப்பிடிப்பு சென்னையில் நடைப்பெற்றுவருகிறது. நேற்று (அக். 02) இரவு முழுவதும் நடைபெற்ற படப்பிடிப்புக்கு மத்தியில் ஹூமா குரேஷி, தான் உடற்பயிற்சி செய்ததை வீடியோவாக எடுத்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் 13ஆம் தேதி சென்னையில் துவங்கியது. மும்பை தாராவி பகுதிபோன்று சென்னையின் பூந்தமல்லி பகுதியில் செட் போடப்பட்டுள்ளது. இரவு, பகலாகத் தொடர்ந்து நடந்துவரும் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்யும் வீடியோவை ஹூமா குரேஷி வெளியிட்டுள்ளார், இது குறித்து அவர், “இப்படிதான் தான் நாங்கள் சுழன்று கொண்டிருக்கிறோம். எங்களுடைய கேப்டன் ஆஃப் தி ஷிப் ரஞ்சித் மற்றும் படக்குழுவினருடன் நள்ளிரவு படப்பிடிப்பில் மிகக் கடுமையாக வேலை செய்துகொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை படப்பிடிப்பு முடிந்த பிறகு எஞ்சிய சில காட்சிகளைப் படமாக்குவதற்குப் படக் குழுவினர் மீண்டும் மும்பை செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Post a Comment

CAPTCHA
Refresh

*