By October 6, 20170 CommentsReport

3டியில் வெளியாகும் 2.O மேக்கிங்..!!

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.O’. பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாகவும் , எமி ஜாக்சன் நாயகியாகவும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் மேக்கிங் வீடியோவின் இரண்டாவது பாகத்தை நாளை (அக்டோபர் 7) வெளியிட உள்ளதாக ஷங்கர் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் உருவாகி வரும் `2.0′ படத்தின் வியாபாரமும் சூடுபிடித்து நல்ல விலைக்கு விற்பனையாகி வரும் நிலையில், படத்தை உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படத்தின் விளம்பரப் பணிகளை உலக அளவில் தொடங்கிவிட்டது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா. படத்தின் இசை வெளியீடு அக்டோபரிலும், டீசர் நவம்பரிலும், ட்ரெய்லர் டிசம்பரிலும் வெளியாகும் என்று லைகா நிர்வாக தலைவர் ராஜு மகாலிங்கம் தெரிவித்திருந்தார்.

இப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்செஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு படம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக இருக்கும் மேக்கிங் வீடியோ எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2.O திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*