By October 6, 20170 CommentsReport

சக்க போடு போடும் `கலக்கு மச்சான்’ பாடல்..!! (வீடியோ)

காமெடி நடிகராகத் திரையுலகில் அறிமுகமாகி வெற்றி கண்டு தற்போது நாயக நடிகராக வளர்ந்திருப்பவர் சந்தானம். ஆனந்த் பால்கி இயக்கத்தில் சர்வர் சுந்தரம் படத்தில் நடித்திருக்கும் அவர், தற்போது சக்க போடு போடு ராஜா படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் இடம்பெறும் கலக்கு மச்சான் பாடல் நேற்று (அக்டோபர் 05) மாலை இணையத்தில் வெளியானது.

ஜி.எல்.சேதுராமன் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார். இவர்களுடன் விவேக், விடிவி கணேஷ், சஞ்சனா சிங், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துவருகின்றனர். இப்படத்தின் மூலம் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சிம்பு-அனிருத் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘கலக்கு மச்சான்’ பாடலை ரோகேஷ் எழுதியுள்ளார்.

பீப் சாங்கின் சர்ச்சைக்குப் பிறகு வெளிவந்துள்ள இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் முந்தைய பாடலுக்கு ஏற்பட்ட சர்ச்சைக்குக் கருத்து சொல்லும் விதமாகவும், பழைய காயங்களிலிருந்து மீண்டு புது விதமாக வாழ்க்கையை அனைவரும் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற தத்துவார்த்தங்களை முன்னிறுத்தும் விதமாகவும் வரிகள் அமைந்துள்ளன. அப்பாடலில்,

கலங்க நாங்க கோழை இல்ல.. களத்தில் எறங்கு காள போல

ரைட்டு தாட்டு உள்ளத்துல.. வச்சிருக்கும் நல்ல புள்ள

கிண்டலுல கிங்குடா..எப்போதுமே யங்குடா..

ஊருக்குள்ள கேளுடா..தோள் கொடுக்கும் ஆளுடா..

நட்புக்கு நான் தேருடா..எடுப்பேன் நல்ல பேருடா..

போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடலை சிம்பு ரசிகர்கள் ட்ரெண்ட்டாக்கிவருகின்றனர். தற்போதைய நிலவரப்படி 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தப் பாடலை கேட்டிருக்கின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*