By October 6, 20170 CommentsReport

ஜனனி ஐயர் எதிர்பார்க்கும் ஒரு வெற்றி..!! (வீடியோ)

ஜெய் நடிப்பில் வெளிவரவிருக்கும் பலூன் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருப்பவர் ஜனனி ஐயர். தற்போது விதி மதி உல்டா படத்தில் ரமீஸ் ராஜாவுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள `தாறுமாறா’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இதன் ட்ரெய்லரை இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டரில் நேற்று மாலை (அக்டோபர் 5) வெளியிட்டார்.

இயக்குநர் முருகதாஸின் உதவியாளர்கள் வரிசையாகப் படங்களை இயக்கிவரும் நிலையில், அவரிடம் பணியாற்றிய விஜய் பாலாஜி இப்படத்தின் மூலம் இயக்குநராய் அறிமுகமாகிறார். இதில் டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவாளராகவும், அஸ்வின் இசையமைப்பாளராகவும் பணிபுரிகின்றனர்.

“மனித வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்தும் விதி என்னும் அமைப்புக்குட்பட்டதே என்று சொல்லக்கூடிய கருத்தை மாற்றி விதியை மதியால் வெல்ல முடியும் என்ற கருத்தை முன்னிறுத்தும் படமாக உருவாகிவருகிறது. காதல், காமெடி, பேன்டஸி கலந்த த்ரில்லிங் படமாக இருக்கும்” என்று இயக்குநர் தெரிவித்துள்ளார். அவர் கூறியது போலவே ட்ரெய்லர் முழுக்க காமெடி காட்சிகளே அதிகம் இடம்பெற்றுள்ளன.

ஜனனி நடித்துள்ள `அதே கண்கள்’, `முப்பரிமாணம்’ மற்றும் தற்போது நடித்துள்ள `பலூன்’ ஆகிய படங்கள் டபுள் ஹீரோயின் படங்கள். இவற்றுக்குப் பிறகு இந்தப் படத்தில் இவர் மட்டும்தான் ஹீரோயின். அவர் தனி நாயகியாக முன்பு நடித்த பாகன், தெகிடி ஆகியவை பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் இப்படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*