By October 6, 20170 CommentsReport

சபாஷ் நாயுடுக்கு பின் இந்தியன் 2..!!

சபாஷ் நாயுடு படத்தின் பணிகள் முடிந்த பிறகே இந்தியன் 2 படத்தின் பணிகள் ஆரம்பிக்கும் என்று கமல் தெரிவித்துள்ளார்.

லைகா நிறுவனம் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் சபாஷ் நாயுடு. இப்படத்தில் துப்பறிவாளராக நடித்துள்ளார் கமல். தசாவதாரம் படத்தில் வரும் பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு முழுநீள காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்றது. இன்னும் சில காட்சிகள் மட்டும் சென்னையில் படமாக்கப்பட வேண்டி இருந்த நிலையில், கமல் தனது அலுவலக படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. அதன் பின்னர் சபாஷ் நாயுடு படத்தின் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘தலைவன் இருக்கிறான் ‘ படத்தின் அறிவிப்பு வெளியானது. இது ஒரு அரசியல் த்ரில்லர் படம் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கமல் – ஷங்கர் கூட்டணி சேர்ந்துள்ளனர். இப்படத்தின் பணிகள் அடுத்த ஆண்டின் மத்தியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் நெறியாளராக இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் அடுத்த மாதத்தில் இருந்து மீண்டும் சபாஷ் நாயுடு படத்தின் பணிகள் ஆரம்பிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நீண்டகாலமாக அனைத்து பணிகளும் முடிவடைந்து இன்னும் வெளிவராமல் இருக்கும் விஸ்வரூபம் 2 படத்தை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், அதன் பிறகே இந்தியன் 2 பணிகள் ஆரம்பிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க நவம்பர் மாதத்தில் கமல் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக வெளியான செய்தி தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*