முழு வேகத்தில் அஞ்சலி..!!
தரமணி படத்தில் கொஞ்ச நேரமே படத்தில் வந்திருந்தாலும் அழுத்தமான கேரக்டரில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் அஞ்சலி. தொடர்ந்து, ராம் இயக்கத்தில் மம்மூட்டியுடன் பேரன்பு, ஜெய்யுடன் பலூன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மலையாளத்தில் ரோசாப்பூ படத்தில் நடிப்பதோடு, விஜய் ஆண்டனியின் காளி படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.
வணக்கம் சென்னை படத்திற்குப் பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பாக அவரது மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் ஆகிய நான்கு நாயகிகள் நடிக்கின்றனர். ஷில்பா கிராமப்புறப் பின்னணியைச் சார்ந்த பாத்திரத்திலும், அம்ரிதா அதற்கு மாறான கேரக்டரிலும் நடித்துவருகின்றனர்.
அஞ்சலியின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது என்பதால் அது குறித்து இப்போது சொல்ல முடியாது என்று என்று கிருத்திகா தெரிவித்திருக்கிறார்.