By October 7, 20170 CommentsReport

மது போதையில் கார் ஓட்டிய ஜெய்க்கு அபராதம்..!!

வாழ்க்கையையும் சினிமா படம் போல் நினைத்தீர்களா என்று நடிகர் ஜெய்யிடம் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மது போதையில் காரை மோதி விபத்து ஏற்படுத்திய வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகர் ஜெய் இன்று (அக்.07) காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். முதல் வழக்காக விசாரணைக்கு வந்த ஜெய் வழக்கை, பிறகு விசாரிப்பதாகக் கூறிவிட்டு மற்ற வழக்கு விசாரணையைத் தொடர்ந்த நீதிபதி மதியம் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

கடந்த மாதம் 21ஆம் தேதி நடிகர் ஜெய், மது அருந்திவிட்டு, போதையில் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது அவர் ஓட்டி வந்த கார் அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இது தொர்பாகக் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஜெய், பிரேம்ஜி ஆகிய இருவரும் அளவுக்கு அதிகமாகக் குடித்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ஜெய் நேற்று ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால் அவர் ஆஜராகாததால் பிடி வாரண்ட் பிறப்பித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு நாட்களில் ஜெய்யைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதியிடம் நடிகர் ஜெய் மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதை ஒப்புக்கொண்டார். வாழ்க்கையையும் சினிமா படம் போல் நினைத்தீர்களா என நீதிபதி

கேள்வி எழுப்பினார். பிறகு ஜெய்க்கு 5,200 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், 6 மாதங்கள் ஓட்டுநர் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்ய உத்தரவிட்டது.

சினிமா நட்சத்திரம் என்ற போர்வையில் எல்லை மீறும் ஜெய் மாதிரியான நடிகர்களுக்கு எவ்வித பாரபட்சமும் பார்க்காமல் வழக்குப் பதிவு செய்த காவல் துறைக்கும், இத்தனை துரிதமாக விசாரணை செய்து தண்டனை வழங்கிய நீதிமன்றத்துக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தே ஆக வேண்டும்.


Post a Comment

CAPTCHA
Refresh

*