By October 11, 20170 CommentsReport

விக்ரம் மகனுடன் பாலா..!!

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில், நாயகனாக விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாக உள்ளார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்குவதாகச் செய்திகள் வெளிவந்தன. தற்போது, பாலா இயக்குகிறார் என்று இறுதி முடிவாகியிருக்கிறது.

விஜய் தேவரகொண்டா – ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியான இந்தப் படத்தை சந்தீப் வங்கா இயக்கியிருந்தார். திரையுலக பிரபலங்களிடையேயும் பாக்ஸ் ஆபீஸிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் தமிழ் மற்றும் மலையாள ரீமேக் உரிமையைக் கடும் போட்டிக்கிடையில் இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. தமிழில் விக்ரம் மகன் துருவ் நாயகனாக ஒப்பந்தமானதை அடுத்து இயக்குநருக்கான தேர்வு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பாலா இயக்க இருப்பதாக விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று (அக்டோபர் 9) மாலை தெரிவித்துள்ளார்.

பாலா இயக்குநராக அறிமுகமான ‘சேது’ படத்தில் ஹீரோவாக விக்ரம் நடித்திருந்தார். விக்ரமின் சினிமா கேரியரில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ‘சேது’ படம் எனச் சொல்லலாம். அதன் பின்னர் ‘பிதாமகன்’ படத்தை இயக்கி விக்ரமை சிறந்த நடிகன் எனச் சொல்ல வைத்தார் பாலா. தற்போது அவரது மகனை வைத்து இயக்கவுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் பணியாற்றவுள்ள இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல் விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*