By October 12, 20170 CommentsReport

சிவகார்த்திகேயனுக்கு உதவும் SPI சினிமாஸ்..!!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வேலைக்காரன். இப்படத்தின் விநியோக உரிமை குறித்த பேச்சுவார்த்தைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. அதன் தொடக்கமாக, திருநெல்வேலி-கன்னியாகுமரி பகுதிகளின் விநியோக உரிமைக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போது சென்னை பகுதியின் திரையரங்க வெளியீட்டு உரிமைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மோகன் ராஜா இயக்கும் இப்படத்தை அதிக பொருட்செலவில் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துவருகிறார். மலையாள சினிமாவுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஃபஹத் பாசில் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பதோடு அவரே தமிழில் டப்பிங்கும் பேசியுள்ளார். பிரகாஷ் ராஜ், சதிஷ், ஆர் ஜே பாலாஜி, சினேகா, ரோபோ சங்கர், சார்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதன் டீசரும் அனிருத் இசையமைத்துப் பாடிய `கருத்தவன்லாம் கலீஜாம்’ பாடலும் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தப் பாடலைப் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் இதன் ஆடியோவை ஒலிக்கச் செய்து பலரும் ஆடிய நடனம், ஒரிஜினல் நடனத்தை மிஞ்சுமளவுக்கு உள்ளது. அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகின்றன.

இப்படத்திற்கான திருநெல்வேலி-கன்னியாகுமரி பகுதிகளின் விநியோக உரிமையை `சியான் ஃபிலிம்ஸ்’ வி.கருணாகர ராஜாவுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. சென்னை பகுதிகளின் திரையரங்க வெளியீட்டு உரிமையை `SPI சினிமாஸ்’ நிறுவனம் கைப்பற்றியிருப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (அக்டோபர்.11) வெளியிட்டுள்ளது.

ஆயுத பூஜை விடுமுறை கொண்டாட்டமாக வெளிவரவிருந்த இத்திரைப்படம் டிசம்பரில் வெளிவரவிருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*