ஸ்டைலிஷ் போலீஸாக விஜய் சேதுபதி..!!
மணிரத்னம் திரைப்படத்தின் அறிவிப்புகள் அத்தனையும் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தத் தவறுவதில்லை. மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ் சிவன், ஸ்ரீகர் பிரசாத் ஆகிய ஜாம்பவான்கள் பங்குபெறும் புதிய படத்தின் நடிகர்கள் குழுவில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அரவிந்த் சாமி, சிம்பு ஆகியோரும் நடிகைகள் லிஸ்ட்டில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் இடம்பெற்றிருக்கின்றனர்.
இரு அணிகளாகப் பிரிந்து இந்த நடிகர்கள் டீம், படத்தில் வேலை செய்வதாகத் தகவல்கள் வெளியானது. மணிரத்னத்தின் பழைய மல்ட்டி ஸ்டார் படங்களை நினைவுகூர்ந்துவரும் ரசிகர்களுக்கு மேலும் அசைபோட, விஜய் சேதுபதி போலீஸாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய் சேதுபதி போலீஸாகவும், அவருக்குத் துணையாக ஜோதிகாவும் நடிக்க மற்ற கலைஞர்கள் அனைவரும் கேங்க்ஸ்டர்களாக நடிக்கிறார்கள் என்றும் தெரிகிறது. பீட்சா படத்தில் பார்த்தது போன்ற ஸ்லிம் அண்ட் ஃபிட் விஜய் சேதுபதியை மணிரத்னம் கேட்டிருக்கிறாராம்.