ஐஸ்வர்யாராயை அடைய விரும்பிய ஹாலிவுட் தயாரிப்பாளர்..!!
ஹாலிவுட் பட தயாரிப்பாளர் வெயின் ஸ்டீபன். இவர் பலநடிகைகளுடன் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். ஐஸ்வர்யா ராயையும் இவர் அடைய விரும்பிய சம்பவம் இப்போது வெளியாகி இருக்கிறது.
ஐஸ்வர்யா ராயின் டேலண்ட் மானேஜராக இருந்த சீமோன் ஷெப்பீல்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அது பற்றி கூறிய அவர்…
“நான் ஐஸ்வர்யாராயின் மானேஜராக இருந்தேன். அப்போது வெயின் ஸ்டீன், ஐஸ்வர்யாராயை தனியாக சந்திக்க துடித்தார். அதை என்னிடம் அவர் தெரிவித்தார்.
தன்னுடன் ஐஸ்வர்யாராயை தனியாக அனுப்பி வைக்கும்படி பலமுறை என்னிடம் கூறினார். அவருடைய நோக்கம் எனக்கு தெரிந்ததால் பலமுறை அவர் சொல்லியும் நான் அதை ஏற்கவில்லை.