By October 14, 20170 CommentsReport

நயன்தாராவின் `அறம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.

கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளாக தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `அறம்’, `வேலைக்காரன்’, `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, சயீ ரா நரசிம்மரெட்டி உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது.

இதில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் `வேலைக்காரன்’ படம் தள்ளிப்போனதை அடுத்து, கோபி நைனார் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் `அறம்’ படம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கேளிக்கை வரி உள்ளிட்ட பிரச்சனையால் புது படங்கள் ரிலீசாகவில்லை. இந்த பிரச்சனைக்கு நேற்று தீர்வு எட்டியுள்ளதை அடுத்து படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கின்றன.

இதையடுத்து தீபாவளிக்கு விஜய்யின் `மெர்சல்’, வைபவ் – ப்ரியா பவானி சங்கரின் `மேயாத மான்’, சரத்குமாரின் `சென்னையில் ஒரு நாள்-2′ உள்ளிட்ட படங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சித்தார்த்தின் `அவள்’, சுசிகணேசனின் `திருட்டுபயலே-2′, செல்வராகவனின் `நெஞ்சம் மறப்பதில்லை’ உள்ளிட்ட படங்கள் நவம்பர் 3-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நயன்தாராவின் `அறம்’ படமும் அதே நாளில் ரிலீசாக இருப்பதாக புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

தணிக்கை குழுவில் படத்திற்கு ‘யு’ சான்றிதழை பெற்றுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*