By October 15, 20170 CommentsReport

சிவகார்த்திகேயன்: இனி வருடத்துக்கு மூன்று படம்..!!

தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துவருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாமே நல்ல வசூல் செய்துள்ளன. வருடத்திற்கு ஒரு படம் நடித்துவரும் சிவகார்த்திகேயன் இனி வருடத்திற்கு மூன்று படங்கள் நடிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தேதியில் சிவகார்த்திகேயன் படங்கள் முன்னணி நடிகர்களுக்கு இணையாக வணிகம் செய்யப்படுகிறது. சினிமாவுக்கு வந்த இந்த 6 வருடங்களில் வருடத்திற்கு ஒருபடம் என நடித்துவருகிறார். ஆனால் இந்த வருடம் இன்னும் அவருடைய படம் வெளியாகாமல் இருக்கிறது. இந்தக் கால தாமதம் குறித்து சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர், “பெரிய கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதுதான் இந்தத் தாமதத்துக்குக் காரணம். ஒவ்வொரு படமும் 100 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இதனால் வருடத்துக்கு ஒரு படம் மட்டுமே நடிக்கும் சூழல் உருவானது. இனிமேல் இதுபோன்ற இடைவெளி இல்லாமல் வருடத்துக்கு மூன்று படங்களாவது கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நிச்சயம் அது நடக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*