By October 15, 20170 CommentsReport

வித்யா பாலன்: குரலால் மயக்க வருகிறார்..!!

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிரடியாகக் களமிறங்கியிருக்கிறார் வித்யா பாலன். துறு துறு கேரக்டரில், அவரது ஒரிஜினல் கேரக்டரைப் போல துடிப்புடன் அவர் படம் நடித்தே பல ஆண்டுகளாகிவிட்டன. இதற்குக் காரணம் சோகமயமான அழுகாச்சி படங்களுக்கு ரசிகர்களிடையே இருக்கும் வரவேற்பு அல்ல. சமூகத்தில் நிலவும் பெண்களுக்கெதிரான அத்தனை கொடுமைகளையும் ஒவ்வொரு படத்திலும் கொஞ்சமாவது சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணம் தான் காரணம். ஆனால், அந்தக் கட்டுப்பாட்டைச் சிறிது தளர்த்திக்கொண்டு அவர் நடித்திருக்கும் திரைப்படம் ‘துமாரி சுலு’.

குடும்பத்தைக் கவனித்துக்கொண்டு, மொபைல் ஃபோனும், பிரெஷர் குக்கரை வெல்வதுமே தனது மிகப்பெரிய லட்சியமாகக் கொண்டு வாழும் ஒரு பெண் தனது மனதுக்குப் பிடித்த ஒரு வேலையைச் செய்யும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றிப் பேசுகிறது துமாரி சுலு திரைப்படம். ஒரு பெண்ணை அவர் சார்ந்த தொழிலை முன்வைத்து எப்படி இந்த உலகம் கணிக்கிறது என்பது இப்படத்தின் கதை.

டிவி சேனல்களில் நடத்தப்படும் பாலியல் சார்ந்த சந்தேகம் குறித்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பெண்களைத் தங்களுக்காக உதவ வந்த ஒரு மனிதி என்று எண்ணாமல், அவரைப் பாலியல் ரீதியாக இந்தச் சமூகம் தொந்தரவு செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா. அதேபோல, தனது குரலின் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களை இரவில் உரங்க வைக்க நினைக்கும் ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றிப் பேசுகிறது துமாரி சுலு. வித்யா பாலனின் வெகுளித்தனமான நடிப்புக்காகவே இந்தப் படத்தின் டிரெய்லர் அதிக பார்வையாளர்களைப் பெறும்.


Post a Comment

CAPTCHA
Refresh

*