By October 15, 20170 CommentsReport

உதயநிதியுடன் ஜோடி சேரும் ஷ்ரத்தா..!!

பொதுவாக எம்மனசு தங்கம் படத்திற்குப் பிறகு உதயநிதி இப்படை வெல்லும், நிமிர் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இப்படங்களைத் தொடர்ந்து மித்ரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் இப்படை வெல்லும் திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ தமிழில் `நிமிர்’ என்ற பெயரில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ரீமேக்காகிவருகிறது. உதயநிதிக்கு ஜோடியாக நமீதா பிரமோத், பார்வதி நாயர் ஆகியோர் நடித்திருக்கும் இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் விஷால் நடிப்பில் உருவாகிவரும் இரும்புத்திரை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் மித்ரனின் மற்றொரு படத்தில் கூட்டணி அமைத்துள்ளார் உதயநிதி. இதற்கு ‘7 கிணறுகள்’ எனப் பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும், விக்ரம் வேதா படத்தின் நாயகி ஷ்ரத்தா இதில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் குறித்த உறுதியான தகவல் விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*