பாபி சிம்ஹா இடத்தை பிடிக்கும் சஞ்சய் தத்..!!
சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன், குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்தப் படம், கடந்த 2014ஆம் ஆண்டு ரிலீஸானது. இந்தப் படத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததோடு, சிறந்த எடிட்டிங்கிற்காக விவேக் ஹர்ஷனுக்கும் தேசிய விருது கிடைத்தது. மேலும் இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற இந்தப் படம், இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் பாபி சிம்ஹா நடித்த கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்க இருக்கிறார். சித்தார்த் கதாபாத்திரத்தில் பர்ஹான் அக்தர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிஷிகாந்த் கமட் இந்தப் படத்தை இயக்குகிறார்.
மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.