By October 18, 20170 CommentsReport

அமலா பாலின் ஸ்மைலி பாடல்..!!

தமிழில் ராட்சன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் என தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருபவர் அமலா பால். திருட்டுப்பயலே படத்தின் வெற்றிக்குப் பிறகு சுசி கணேசன் இயக்கத்தில் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள திருட்டு பயலே 2-வில் நாயகியாக நடித்துள்ளார். இதில் இடம்பெற்றுள்ள `ஸ்மைலி’ பாடலை நேற்று (அக்டோபர் 16) மாலை திங் மியூசிக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். பா.விஜய்யின் வரிகளில் வெளியான `நீ பார்க்கும் பார்வை கண்ணோடு’ மற்றும் `நீண்ட நாள் ஆனது’ ஆகிய இரு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்பாடல்கள் மூலம் வித்யாசாகர் மீண்டும் மெலடி மன்னர் என்பதை நிரூபித்திருந்தார். இதனையடுத்து புன்னகை என்ற ஒன்றை மையமாகக் கொண்டு வெளிவந்திருக்கும் ஸ்மைலி சாங் ரசிக்கும் படியாக உள்ளது.

நீ பார்க்கும் பார்வை கண்ணோடு பாடலில் கண்களால் மயக்கிய அமலா பால் இப்பாடலில் கவர்ச்சியால் கிறங்கடித்துள்ளார். `அச்சுக்கு புச்சுக்கு’ என தொடங்கும் இப்பாடலில் `இதயத்தை திறக்கும் சாவி, புன்னகை’ என்று புன்னகை குறித்து பல விஷயங்களை சொல்லியிருக்கிறார் பாடலாசிரியர். உதாரணமாக,

கொஞ்சமா வரும் கோபங்கள்…கொஞ்சமா வரும் தாபங்கள்..

கொஞ்சலாய் மாறும்.. கெஞ்சலாய் மாறும் ..

நீ… நீ… ஒரு முறை சிரித்தால்..

என புன்னகை குறித்து பலவாறான விஷயங்களை சொல்லி செல்கிறது இப்பாடல். பாபி சிம்ஹா,பிரசன்னா ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் நவம்பரில் வெளிவரவிருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*