By October 19, 20170 CommentsReport

மோகன்லால் படத்தில் த்ரிஷா..!!

தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ச்சியாக நடித்துவரும் த்ரிஷா மலையாளத்தில் முதன்முறையாக நிவின் பாலியுடன் இணைந்திருக்கும் ‘ஹே ஜூட்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

மோகன்லால் தற்போது பிரமாண்டமாக உருவாகிவரும் ‘ஒடியன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்டு க்ளைமாக்ஸ் காட்சியில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பைக் கடந்த சில நாள்களுக்கு முன்பு மோகன்லால் வெளியிட்டிருந்தார். அதில், ராஜீவ் அஞ்சல் மற்றும் கோபால் வர்மா போன்றவர்களிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய அஜய் வர்மா இயக்குவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாகவும், மற்றொரு நாயகியாக மீனாவும் நடிக்க உள்ளாரென தகவல் வெளிவந்துள்ளது. மோகன்லாலுடன் பல படங்களில் நடித்துவிட்ட மீனா, இந்த வருட ஆரம்பத்தில் வெளியான ‘முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்’ படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் நிவின் பாலியுடன் நடித்துள்ள த்ரிஷா, மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவிருப்பது இதுவே முதன்முறையாகும்.


Post a Comment

CAPTCHA
Refresh

*