சிம்புவின் நூறாவது பாடல்..!!
நடிப்பு, இயக்கம், பாடகர், இசையமைப்பாளர் என அனைத்துத் துறைகளிலும் தனக்கென ஒரு தனி பாணியை வைத்திருப்பவர் நடிகர் சிம்பு. அவர் பாடிய நூறாவது பாடல் விரைவில் வெளியாக உள்ளது.
“சக்கை போடு போடு ராஜா” படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் சிம்பு, “மோனிஷா என் மோனலிசா” படத்தின் மூலம் தன் முதல் பாடலைப் பாடியவர், விரைவில் வெளியாகயுள்ள “என் ஆளோட செருப்பக் காணோம்” படத்தில் பாடியிருக்கும் பாடல் மூலம் நூறு பாடல்களைப் பாடிய நடிகர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.
சிம்பு தன் நூறாவது பாடல் குறித்து கூறுகையில், எனக்குப் பாடல்கள் பாடுவதில் ஆர்வம் அதிகம். இந்த ஆர்வம் என் தந்தையிடமிருந்து எனக்கு வந்தது. பல சூப்பர் ஹிட் பாடல்களை நான் பாடியுள்ளேன். நூறு பாடல்களைப் பாடியிருக்கிறேன் என்பதை நான் உணரவே இல்லை. எனக்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர்களுக்கு நன்றி. என்னை ஊக்கப்படுத்தும் என் ரசிகர்களுக்கும் நன்றி. நூறு என்பது வெறும் நம்பர் என்றாலும் இதைப் பெருமையாக உணர்கிறேன் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.