By October 22, 20170 CommentsReport

நயன்தாராவிற்கு போட்டியாக அனுஷ்கா..!!

பாகுபலி படத்திற்கு பிறகு தெலுங்கில் உருவாகியுள்ள பாக்மதி படத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா.

பாகுபலி 2 படத்திற்கு பிறகு அசோகன் இயக்கத்தில் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் பாக்மதி படத்தை தயாரிக்கிறது. இதில் மலையாள நடிகர் ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத், ஆதி, உள்ளிட்ட பலர் நடித்திருப்பதுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. அனுஷ்கா ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடிக்கும் பாக்மதி படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடைபெற்று வருவதால் படமானது வரும் டிசம்பர் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் உருவாகும் படம் அறம். இந்த படத்தில் நயன்தாராவும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கோட்டப்பாடி ஜெ. ராஜேஷ் என்பவர் தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனுஷ்கா மற்றும் நயன்தாரா இருவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக நடித்து அடுத்தடுத்து வெளிவரவுள்ள இந்த படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*