மேயாத மான் படத்தை பார்த்து ரசித்த ரஜினி..!!
வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28 : செகண்ட் இன்னிங்க்ஸ்’ மற்றும் அருண் வைத்யநாதனின் ‘நிபுணன்’ படங்களுக்கு பிறகு வைபவ் நடிப்பில் ‘மேயாத மான்’ படம் வெளியானது. அறிமுக இயக்குனர் ரத்ன குமார் இயக்கிய இப்படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக சின்னத்திரை புகழ் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.
மேலும், முக்கிய வேடங்களில் இந்துஜா, விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்திருந்தனர். பிரதீப் குமார் – சந்தோஷ் நாராயணன் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ்’ மூலம் தயாரித்திருந்தார்.
இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. பல திரையுலக நட்சத்திரங்களும் படத்தை புகழ்ந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நேற்று படத்தை பார்த்து ரசித்ததாகவும், ‘மேயாத மான்’ டீமை வெகுவாக பாராட்டியதாகவும் பதிவு செய்திருக்கிறார்.