By October 26, 20170 CommentsReport

தடைகளை உடைத்து மீண்டும் சாதனை படைக்க வரும் மெர்சல்..!!

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘மெர்சல்’ படம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை சந்தித்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டான் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தமிழகத்தில் வெளியாகிய சில நாட்களில் மத்திய-மாநில அரசுகளை தாக்கும் காட்சிகளும், வசனங்களும் படத்தில் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது.

எனவே குறிப்பிட்ட அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பின்னர் அதற்கும் ஒரு முடிவு எட்டப்பட்டது. இவ்வாறாக இந்த படத்திற்கு வந்த சோதனைகளுக்கு ஒரு முடிவு எட்டப்பட்டிருக்கும் நிலையில், ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான `அதிரிந்தி’ படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதன்படி வருகிற அக்டோபர் 27-ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது, `அதிரிந்தி’ படத்திற்கான தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்காததால் சொன்ன நாளில் படம் வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்தது.

தற்போது, தணிக்கை குழு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், அக்டோபர் 27ம் தேதி தெலுங்கில் ‘மெர்சல்’ படம் வெளியாக இருப்பது உறுதியாகி விட்டது. தமிழில் வரவேற்பு பெற்றது போல், தெலுங்கிலும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*