பிரபுதேவா ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்?..!!
தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளைக் கொண்ட நடிகர்களுள் ஒருவர் பிரபுதேவா. நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பலமுகங்களை கொண்ட பிரபு தேவா தற்போது எஸ்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் `யங் மங் சங்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் `மெர்குரி’, கல்யாண்.எஸ் இயக்கத்தில் `குலேபகாவலி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. சதுரம் 2 படத்தை இயக்கிய சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நடிக்க பிரபிதேவா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
அந்த படத்தில் பிரபு தேவா ஜோடியாக `ஒரு நாள் கூத்து’ நடிகை நிவேதா பெத்துராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இயக்குநர் சுமந்த், நிவேதா பெத்துராஜை சந்தித்திருக்கிறார். இதையடுத்து அவரது பேஸ்புக் பக்கத்தில் விரைவில் நல்ல தகவல் வரும் என்றும் கூறியிருக்கிறார்.
நிவேதா பெத்துராஜ் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் `பார்ட்டி’ படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா நடித்துள்ள `டிக் டிக் டிக்’ படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.