நவம்பர் 24ம் தேதி சென்னை 2 சிங்கப்பூர் அழைத்து செல்லும் அப்பாஸ் அக்பர்..!!
ஜிப்ரான் இசையில் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிட்டு பெரும் பரபரப்பை படக்குழுவினர் ஏற்படுத்தினர். ஜிப்ரானின் இசை இப்படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. அவரது இப்பட பாடல்கள் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இப்படத்திற்கான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
புதுமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீஸ் செய்யப்பட்ட தினத்திலிருந்து சினிமா ரசிகர்களிடையே இந்த ட்ரைலர் அசத்தலான வரவேற்பை பெற்று வருகிறது. மிக சுவாரஸ்யமாக, வித்யாசமாக இருக்கும் இந்த ட்ரைலரை ரசிகர்கள் மட்டுமின்றி வணிக தரப்பினரும் ரசித்து பாராட்டியுள்ளனர்.
இது குறித்து இயக்குனர் அப்பாஸ் அகபர் கூறும்போது, ”இந்த ட்ரைலருக்கு கிடைத்துள்ள வரவேற்பு எங்களது உழைப்பிற்கு கிடைத்துள்ள சன்மானமாகும். நான் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமான வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வரவேற்பால் இந்த படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த ட்ரைலரை விடவும் படம் இன்னும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என உறுதியாக கூறுகிறேன். ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் ரசித்து மகிழ்வார்கள் என நம்புகிறேன். ட்ரைலருக்கு தந்த வரவேற்புக்காக மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இப்படத்தை மிகவும் ஆவலாக எதிர்நோக்கியுள்ளேன்” என்றார்.