By October 30, 20170 CommentsReport

சூர்யா 36வது படத்தின் புதிய அப்டேட்..!!

சூர்யா நடிப்பில் தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் உருவாகி வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விரைவில் அப்பணிகள் முடிவுற்று, இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு.

அதனைத் தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. செல்வராகவன் மற்றும் சுதா கொங்கரா படங்களில் ஒரே சமயத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

சந்தானம் நாயகனாக நடித்துவரும் ‘மன்னவன் வந்தானடி’ படத்தின் படப்பிடிப்பு முடிவுபெறாத நிலையில், செல்வராகவன் – சூர்யா இணையும் படத்தின் நிலை குறித்து கேள்வி எழுந்தது.

இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில், “செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கப்படும். தீபாவளிக்கு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் இதர நடிகர், நடிகைகள் உள்ளிட்ட விஷயங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.


Post a Comment

CAPTCHA
Refresh

*