By November 4, 20170 CommentsReport

கமல் பிறந்தநாளில் விருந்தளிக்க வரும் `விஸ்வரூபம் 2′..!!

கமல்ஹாசன் இயக்கத்தில் அவரே நடித்து, கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்’. இரு பாகங்களாக உருவாகி வந்த இப்படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதை அடுத்து அதன் இரண்டாவது பாகமும் தயாராகி வந்தது.

இந்நிலையில், சில தொழில்நுட்ப மற்றும் சட்ட சிக்கல்களால் `விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாவது பாகம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் கமல் நடிப்பில் `உத்தம வில்லன்’, `பாபநாசம்’, `தூங்காவனம்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாகின. அதைத் தொடர்ந்து `சபாஷ் நாயுடு’ படத்திலும் நடித்தார்.

இந்நிலையில், `விஸ்வரூபம்-2′ குறித்து எந்த தகவலும் வராத நிலையில், `விஸ்வரூபம் 2′ படத்தின் மீதமுள்ள காட்சிகள் விரைவில் தொடங்கவிருப்பதாக தெரிவித்த கமல் அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார்.

இப்படி இருக்கும் நிலையில், `விஸ்வரூபம்-2′ படத்தின் டிரைலர் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. பாடல்கள் சிறப்பாக வந்துள்ளதாக ஜிப்ரான் தெரிவித்துள்ளார். கமல் ஒரு பாடலை பாடியுள்ளதாகவும் கூறியிருக்கிறார். படத்தின் டிரைலர் சிறப்பாக வந்திருப்பதாகவும் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தலைப்பில் உருவாகி வரும் `விஸ்வரூபம்-2′ படத்தில், அதன் முதல் பாகத்தில் நடித்திருந்த பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

`விஸ்வரூபம்-2′ வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*