By November 6, 20170 CommentsReport

ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் படப்பிடிப்பு..!!

குயின் திரைப்படத்தின் ரீமேக் ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் பாரீஸில் நடைபெற்றுவருகிறது.

மார்ச் 2014இல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிப்பில் வெளியான படம் ‘குயின்’. அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் நிறுவனம் வெளியிட்டது. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.

தற்போது இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன் மற்றும் கன்னடத்தில் பரூல் யாதவ் நடித்து வருகின்றனர். இதில் தமிழ் மற்றும் கன்னட ரீமேக் இரண்டையும் ரமேஷ் அரவிந்த் இயக்கிவருகிறார்.

‘குயின்’ படத்தின் பிரதான காட்சிகள் வெளிநாட்டில்தான் படமாக்கப்பட்டது. ஒரே தயாரிப்பாளர் 4 மொழி ரீமேக்கையும் தயாரித்துவருவதால், சரியாகத் திட்டமிட்டு தற்போது பாரீஸில் அனைத்து மொழி ரீமேக்கின் படப்பிடிப்பும் நடைபெற்றுவருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*