By November 6, 20170 CommentsReport

கமல் – ஷங்கர் கூட்டணியில் அனிருத்..!!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 பற்றிய அறிவிப்பு வெளியானதிலிருந்தே படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அரசியலில் காய் நகர்த்தி வரும் கமல் தற்போது நடிக்கும் இந்த படம் அரசியல் கருத்துக்களை மையப்படுத்தி வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. ஷங்கர் – கமல் கூட்டணியில் தற்போது அனிருத் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன், நண்பன் படத்தை தவிர்த்து மற்ற அனைத்துப் படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தியன் படத்தில் அவர் இசையமைத்த அனைத்து பாடல்களும் பயங்கர ஹிட். எனவே இந்தியன் 2 படத்திலும் ரஹ்மான் தான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனிருத் இணைந்துள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன. தனது புதுமையான இசையால் இளம் ரசிகர்களை ஈர்த்து வரும் அனிருத், கமல் படத்தில் முதன்முறையாக இணைந்திருப்பது குறித்து கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

‘2.0’ படத்துக்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி அப்படம் வெளியாக உள்ளது. அதே சமயத்தில் ‘இந்தியன் 2’ படத்துக்கான கதை, திரைக்கதை விவாத வேலைகளிலும் ஷங்கர் ஈடுபட்டுள்ளார். முதலில் தில்ராஜ் தயாரிப்பதாக இருந்த இப்படம் தற்போது லைகா நிறுவனத்திற்கு மாறியுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*