By November 6, 20170 CommentsReport

பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாகப் பேசுங்கள்..!!

பயம் காரணமாகவே தாங்கள் பணிபுரியும் இடங்களில் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் பற்றி பெண்கள் பேச மறுத்து வருகின்றனர் என்று பாலிவுட் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

“பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் சந்திக்கும் பாலியல் தொல்லை குறித்து துணிச்சலுடன் பேச மறுக்கிறார்கள். அதையும் தாண்டி தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாகப் பேசும் பெண்களை இந்தச் சமூகம் அவமான சின்னமாக பார்ப்பது தவறானது” என்று வித்யா பாலன் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று (நவம்பர் 3) மும்பையில் நடைபெற்ற பாலிவுட் நடிகர்களுக்கான பயிற்சிப்பட்டறை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வித்யா பாலன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “பாலியல் தொல்லை என்பது சினிமா துறையில் மட்டும் அல்லாமல், ஒவ்வொரு துறையிலும் நிகழ்கிறது. சினிமா துறை என்பது சமுதாயத்தின் ஒரு அங்கம் என்பதால் இங்கு பாலியல் சம்பவங்கள் செய்தியாக்கப்படுகின்றன. பாலிவுட் திரையுலகில், பாலியல் தொல்லைகள் பலம்வாய்ந்த, வெற்றியாளர்களுக்கும் நேர்ந்திருக்கிறது. ஆனால் அவர்கள் அதனை எதிர்த்து எதுவும் செய்யவில்லை. சில நேரங்களில் நான் நடிக்கும் போது, அசௌகரியமாக உணரும் நபர்களிடம் இருந்து எப்போதும் நான் விலகியே இருக்கிறேன். அதன் மூலம் என்னை நான் பாதுகாத்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*