By November 8, 20170 CommentsReport

ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்பில் விபத்து..!!

ஐஸ்வர்யா ராய் நடிக்கும் ‘ஃபான்னி கான்’ படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் உதவி இயக்குநர் படுகாயம் அடைந்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய், அனில் கபூர், ராஜ்குமார் ராவ் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அதுல் மஞ்சுரேக்கர் இயக்குகிறார். எவ்ரிபடி’ஸ் பேமஸ் என்ற போர்ச்சுகல் படத்தின் ரீமேக்கான இதில் ஐஸ்வர்யா ராய் பாடகி ஆவதற்காக வாய்ப்புத் தேடி அலையும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மியூசிக்கல் காமெடி படமான இதன் படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஃபுளோரா பவுண்டேன் என்ற இடத்தில் நேற்று முன்தினம் (நவம்பர் 5) நடைபெற்றது. அப்போது ஐஸ்வர்யா ராய் ஒரு வாடகை காரை அழைப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அப்பகுதியில் வேகமாக வந்த பைக் ஒன்று, பெண் உதவி இயக்குநர் ஒருவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவருக்குப் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர்.

இந்த விபத்து குறித்து படத்தின் தயாரிப்பாளர் ப்ரெர்னா அரோரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “படப்பிடிப்பின்போது உதவி இயக்குநர் காதில் வாக்கி டாக்கியின் ஹெட் போனை மாட்டியிருந்ததால் பைக் சத்தத்தை அவர் கவனிக்கவில்லை. இதனால் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவர் நன்றாகவுள்ளார். விரைவில் அவர் படக்குழுவினருடன் இணைவார்” என்று தெரிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*