By November 8, 20170 CommentsReport

சங்கத் தலைவனில் ரம்யா..!!

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா, மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரகனி நடிக்கும் சங்கத் தலைவன் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி, சூர்யா நடித்த மாஸு என்கிற மாசிலாமணி, ஜெயம் ரவியின் வனமகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ரம்யா, கைத்தறி நெசவாளர்கள் வாழ்வை மையமாக வைத்து உருவாகவுள்ள சங்கத் தலைவன் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் நவம்பர் 15 முதல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெறவுள்ளது என டெக்கான் கிரானிக்கல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெசவாளர் சங்கத் தலைவராக சமுத்திரகனி நடிக்க, கருணாஸ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு நாவலை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தை இயக்குநர் வெற்றி மாறன் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு வேல்ராஜ். படத்தொகுப்பு வெங்கடேஷ். படக் குழு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு சில தினங்களில் வெளிவரவுள்ளது.

இயக்குநர் மணிமாறன் இதற்கு முன் சித்தார்த் நடித்த உதயம் என்.ஹச் 4, ஹரீஷ் கல்யாண் நடித்த பொறியாளன், ஜெய் நடித்த புகழ் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*