By November 8, 20170 CommentsReport

வழக்கறிஞராக நடிக்கும் தப்ஸி..!!

அனுபவ் சின்ஹா இயக்கும் ‘முல்க்’ படத்தில் வழக்கறிஞராக நடித்து வருகிறார் தப்ஸி பன்னு. வழக்கறிஞர்களின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை அறிந்துகொள்ள நீதிமன்றத்துக்குச் சென்று அவர்களுடன் தப்ஸி பொழுதைக் கழிப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூட்வா 2 படத்தைத் தொடர்ந்து தப்ஸி நடித்துவரும் இந்தப் படத்தில் ரிஷி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் அவர் தப்ஸியின் மாமனாராக நடித்துள்ளார். இதுகுறித்து தப்ஸி, “இந்தப் படத்தில் நான் சில காட்சிகளில் மட்டுமே ரிஷி சாருடன் சேர்ந்து நடித்துள்ளேன். அவரோடு சேர்ந்து நடித்தது புது அனுபவமாக இருந்தது. இந்த வாய்ப்புக்காக பலநாள் காத்திருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்துக்காக நீதிமன்றத்துக்குச் சென்று வழக்கறிஞர்கள் பற்றி தெரிந்துகொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள அவர், ‘நீதிமன்றத்தில் சாதிக்கலாம்’ என்ற வசனத்தைக் கூறும்போது மகிழ்ச்சியான உத்வேகம் பிறப்பதாகத் தெரிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*