By November 8, 20170 CommentsReport

காமெடி கூட்டணியில் ஆனந்தி..!!

பண்டிகை படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘கயல்’ ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

அறிமுக இயக்குநர் கே.பி.ஜெகன் இயக்கத்தில் உருவாகிவரும் இதில், `பசங்க’ படத்தில் குழந்தை நட்சத்திரமாய் நடித்து கவனத்தை ஈர்த்த (பாண்டி) தமிழ் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், சிங்கம் புலி, பால சரவணன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை டிரம் ஸ்டிக்ஸ் புரொடக்ஷன் சார்பில் எஸ்.சக்திவேல் தயாரித்து வருகிறார்.

இசான் தேவ் இசையில் சிம்பு பாடிய ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ பாடலும், படத்தின் டீசரும் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் பிரேம்ஜி அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்ரெய்லர் கவனத்தைப் பெற்று வருகிறது. இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள யோகி பாபு உள்ளிட்ட பலரின் நகைச்சுவை காட்சிகள் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

காமெடி கலந்த ஓர் அழுத்தமான காதல் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை நவம்பர் 17ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


Post a Comment