By November 9, 20170 CommentsReport

ஜிகர்தண்டா ரீமேக்கில் தமன்னா..!!

ஜிகர்தண்டா படத்தின் இந்தி ரீமேக்கில் தமன்னா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடித்துப் பெரிய அளவில் வரவேற்பு பெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா. மதுரையை மையமாக வைத்து உருவான இந்தப் படம் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹாவிற்கும் சிறந்த படத்தொகுப்பிற்கான விருதை விவேக் ஹர்ஷனுக்கும் பெற்றுத் தந்தது. இந்தியில் ரீமேக்காகும் இந்த படத்தை அஜய் தேவ்கன் தயாரிக்கிறார்.

“படக் குழு தமன்னாவை இதில் நடிக்கவைக்க ஆர்வமாக உள்ளது. இது தொடர்பாக தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவரும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார், ஆனால் இன்னும் ஒப்பந்தமாகி கையெழுத்திடவில்லை” எனப் படக் குழுவுக்கு நெருக்கமானவர்கள் டெக்கான் கிரானிக்கலிடம் தெரிவித்துள்ளனர்.

சித்தார்த் நடித்திருந்த உதவி இயக்குநர் வேடத்தில் ஃபர்கான் அக்தரும் பாபி சிம்ஹா ஏற்றிருந்த தாதா கதாபாத்திரத்தில் சஞ்சய் தத்தும் நடிக்க உள்ளனர். நிஷிகாந்த் கமாட் இயக்குகிறார். விரைவில் இது பற்றிய தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*