By November 9, 20170 CommentsReport

டப்பிங்கைத் தொடங்கிய சூர்யா..!!

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.

எஞ்சியிருந்த ஒரே ஒரு பாடலின் படப்பிடிப்பையும் முடித்துவிட்ட இயக்குநர் விக்னேஷ் சிவன், அதன் அடுத்த கட்டத்துக்கான நகர்வுக்குத் துரிதமாகியுள்ளார். அதன் முதற்கட்டமாக டப்பிங் பணியில் இறங்கியுள்ளார். சூர்யா வசனம் பேசக்கூடிய காட்சிகளின் டப்பிங் பணி தொடங்கியுள்ளதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததோடு சூர்யாவின் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அனிருத் இசையமைப்பில் வெளியான ‘நானா தானா’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து அந்தோணி தாசன் குரலில் குத்துப் பாடலாக வெளிவந்த ‘சொடக்கு பாடல்’ 45 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றிருக்கிறது. ரம்யா கிருஷ்ணன், சரண்யா, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா மற்றும் சத்யன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துவரும் இந்தப் படத்தை அடுத்த வருடம் (2018) பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*