By November 12, 20170 CommentsReport

சிம்புவுக்கு போலீஸ் பாதுகாப்பு..!!

பணமதிப்பழிப்புக்கு எதிராக நடிகர் சிம்பு பாடிய பாடல், இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனால் பாஜக மற்றும் அதன் அமைப்புகள் போராட்டம் நடத்தலாம் என்பதால் நடிகர் சிம்பு வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

தட்ரோம் தூக்குறோம் படத்திற்காக கபிலன் வைரமுத்து எழுதிய பாடல் பண மதிப்பழிப்பு மட்டுமன்றி ஜி.எஸ்.டி குறித்தும் விமர்சிப்பதாக அமைந்துள்ளது. அந்தப் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். கடந்த நவம்பர் 8ம் தேதி வெளியான டிமானிடேஷன் ஆந்தம் என்ற பெயரில் வெளியாகியுள்ள இப்பாடல் பணமதிப்பழிப்பால் மக்கள் சந்தித்த இன்னல்கள், கறுப்புப்பணம், விஜய் மல்லையா எனப் பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் சென்றுள்ளது.

இதன் காரணமாக பாஜக அதன் சார்பு அமைப்புகள் சிம்புவுக்கு எதிராக போராட்டத்தில் இறங்க வாய்ப்புள்ளது என்பதால் சென்னை தி.நகர் மாசிலாமணி தெருவில் உள்ள நடிகர் சிம்பு வீட்டிற்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*