By November 12, 20170 CommentsReport

விஷ்ணுவுடன் நிவேதா டூயட்?..!!

`வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தை தொடர்ந்து எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஷ்ணு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய மாவீரன் கிட்டு, முருகானந்தம் இயக்கிய கதாநாயகன் ஆகிய படங்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காததை அடுத்து கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு. ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம், பொன் ஒன்று கண்டேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், எழில் இயக்கத்தில் விஷ்ணு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை இஷான் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் துஷ்யந்த் தயாரிக்கவுள்ளார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்க நிவேதா பெத்துராஜிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது. விரைவில் இந்தப் படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் மற்றும் பணியாற்றவுள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*