By November 15, 20170 CommentsReport

`விஸ்வரூபம்-2′ படத்தின் முக்கிய அப்டேட்..!!

கமல்ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்’.

இரு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாவது பாகத்திற்கான 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், மீதமிருக்கும் காட்சிகளை படமாக்குவதில் தொய்வு ஏற்பட்டது. மேலும் சில பிரச்சனைகளால் `விஸ்வரூபம்-2′ கிடப்பில் போடப்பட்டது.

கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தலைப்பில் உருவாகும் `விஸ்வரூபம்-2′ படத்தில், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், `விஸ்வரூபம்-2′ படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக தெரிவித்த கமல், அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை சில மாதங்களுக்கு வெளியிட்டார். இந்நிலையில், மீதமிருக்கும் காட்சிகள் வருகிற நவம்பர் மாத இறுதியில் படமாக்கப்பட இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

இதுஒருபுறம் இருக்க `விஸ்வரூபம் 2′ படத்தின் டிரைலர் சிறப்பாக வந்திருப்பதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இவ்வாறாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் `விஸ்வரூபம்-2′ அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*