By November 16, 20170 CommentsReport

வீரையன் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

‘சென்னை 28’, ‘சுந்தரபாண்டியன்’, ‘ரம்மி’, ‘பிச்சுவா கத்தி’ ஆகிய படங்களில் நடித்த இனிகோ பிரபாகரன், தற்போது ‘வீரையன்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ஷைனி நடித்துள்ளார். மேலும், கயல் வின்சென்ட், தென்னவன், வேலா ராமமூர்த்தி, ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தை பரித் இயக்கியுள்ளார். இவர் எழுத்தாளர் ‘கலைமாமணி’ கலைமணியிடம் உதவியாளராகவும், ‘கதிர்வேல்’ படத்தின் இணை இயக்குனராகவும், ’களவாணி’ படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். எஸ்.என்.அருணகிரி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமி தஞ்சை மாவட்டம். கால ஓட்டத்தில் இது தடம் புறண்டு இப்போது மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்ற பின்புலத்துடன் 90களில் நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறார் இயக்குனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இப்படம் நவம்பர் 24ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சக்தி பிலிம் பேக்டரி இப்படத்தை வெளியிடுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*