By November 18, 20170 CommentsReport

போலீஸ் வேடத்தில் இஷா கோபிகர்..!!

தமிழில் என் சுவாச காற்றே, ஜோடி, நெஞ்சினிலே என பல படங்களில் நடித்தவர் இஷா கோபிகர். இவர் இந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான லூட் திரைப்படத்தில் ஏ.சி.பி. நிஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து தற்போது இவர் கன்னடத்தில் வெளியாகும் ஒப்பம் என்ற மலையாள படத்தின் ரீமேக்கில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார்.

இஷாவுக்கு ஜோடியாக நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் முதன்முறையாக இவர் பார்வை குறைபாடுள்ள நபராக நடிக்கிறார். வில்லனாக வசிஷ்ட சிம்ஹா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் மற்றுமொரு கதாநாயகி நடிக்கவுள்ளதாகவும் அவரது பெயர் விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

எம்.வி.வி சத்யநாராயணா உடன் இணைந்து சம்பத் குமார் தயாரிக்க அர்ஜுன் ஜியானா இசையமைக்கிறார். ராகுல் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். நவம்பர் 23ஆம் தேதியன்று படத்தைப் பற்றிய அதிகாரபூர்வத் தகவலை வெளியிட்ட பின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*