By November 18, 20170 CommentsReport

மௌனகுரு’ இயக்குநருடன் ஆர்யா..!!

நடிகர் ஆர்யா நடிக்கவுள்ள புதிய படத்தை மௌனகுரு படத்தின் இயக்குநர் சாந்தகுமார் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அருள்நிதியின் மௌனகுரு திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அப்படத்தை இயக்கிய சாந்தகுமார் ஆர்யாவின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகவும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த உறுதியான தகவல் இன்னும் வெளிவரவில்லை. மேலும் வெகு விரைவில் இப்படத்தின் டைட்டில், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடம்பன் படத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா அமீரின் சந்தனத்தேவன், கன்னடத்தில் ராஜரதா என அடுத்தடுத்து படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். மேலும் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கவிருக்கும் சங்கமித்ரா படமானது பிரம்மாண்டமாக உருவாகவுள்ள நிலையில் அதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*